முகப்பு
தமிழ்நாடு

இடியும் நிலையில் கடம்பத்தூர் கிளை நூலகம்

திருவள்ளூர்: வரும் வாசகர்கள், எப்போது இடிந்து விழும் என அச்சப்படும் அளவுக்கு கடம்பத்தூர் ஊராட்சி கிளை நூலகம் உள்ளது. ÷திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளில் ஒன்றாக கடம்பத்தூர் ஊராட்சி உள்ளது

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:58 PM
பகிர்:

திருவள்ளூர்: வரும் வாசகர்கள், எப்போது இடிந்து விழும் என அச்சப்படும் அளவுக்கு கடம்பத்தூர் ஊராட்சி கிளை நூலகம் உள்ளது.

÷திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளில் ஒன்றாக கடம்பத்தூர் ஊராட்சி உள்ளது. முதல் நிலை ஊராட்சியான இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கிளை நூலகம் இயங்கி வருகிறது.

கடந்த 1.1.1965-ல் அப்போதைய தமிழக முதல்வர் பக்தவத்சலம் இக்கிளை நூலகத்தை திறந்துவைத்தார். ÷கடம்பத்தூரில் அரசு நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மின்சார அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்டவையும் உள்ளன.

÷கடம்பத்தூர், வெண்மனம்புதூர், எம்.ஜி.ஆர் நகர், காந்தாமணிநகர், கசுவாநல்லாத்தூர், புதுமாவிலங்கை உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடம்பத்தூர் கிளை நூலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. 2000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

அவல நிலையில் கட்டடம்: ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்நூலகக் கட்டடம் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலத்தில் இந்நூலகத்தில் மழைநீர் ஒழுகும் நிலை உள்ளது.

÷நூல்கள் கிழிந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்ட நூலகத் துறை சார்பில் ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே இடத்திலேயே உள்ள பழையக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டப்படுமா எனவும் தெரியவில்லை. ÷நாள்தோறும் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் வந்து செல்லும் இந்நூலகத்துக்கு  ஊராட்சி சார்பில் புதிய இடம் ஒதுக்கித் தரப்படுமா என வாசகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.