இடியும் நிலையில் கடம்பத்தூர் கிளை நூலகம்
திருவள்ளூர், செப். 21: வரும் வாசகர்கள், எப்போது இடிந்து விழும் என அச்சப்படும் அளவுக்கு கடம்பத்தூர் ஊராட்சி கிளை நூலகம் உள்ளது. ÷திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளில் ஒன்றாக கடம்பத்தூர் ஊரா
திருவள்ளூர், செப். 21: வரும் வாசகர்கள், எப்போது இடிந்து விழும் என அச்சப்படும் அளவுக்கு கடம்பத்தூர் ஊராட்சி கிளை நூலகம் உள்ளது.
÷திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளில் ஒன்றாக கடம்பத்தூர் ஊராட்சி உள்ளது. முதல் நிலை ஊராட்சியான இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கிளை நூலகம் இயங்கி வருகிறது.
கடந்த 1.1.1965-ல் அப்போதைய தமிழக முதல்வர் பக்தவத்சலம் இக்கிளை நூலகத்தை திறந்துவைத்தார். ÷கடம்பத்தூரில் அரசு நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மின்சார அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்டவையும் உள்ளன.
÷கடம்பத்தூர், வெண்மனம்புதூர், எம்.ஜி.ஆர் நகர், காந்தாமணிநகர், கசுவாநல்லாத்தூர், புதுமாவிலங்கை உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடம்பத்தூர் கிளை நூலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. 2000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அவல நிலையில் கட்டடம்: ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்நூலகக் கட்டடம் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலத்தில் இந்நூலகத்தில் மழைநீர் ஒழுகும் நிலை உள்ளது.
÷நூல்கள் கிழிந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்ட நூலகத் துறை சார்பில் ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே இடத்திலேயே உள்ள பழையக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டப்படுமா எனவும் தெரியவில்லை. ÷
நாள்தோறும் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் வந்து செல்லும் இந்நூலகத்துக்கு ஊராட்சி சார்பில் புதிய இடம் ஒதுக்கித் தரப்படுமா என வாசகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
இடியும் நிலையில் உள்ள கடம்பத்தூர் ஊராட்சி கிளை நூலகம்.