முகப்பு
தமிழ்நாடு

பொள்ளாச்சி - பாலக்காடு அகல ரயில்பாதை பணிகள் முடிவடைவது எப்போது?

நீண்ட காலமாக நடைபெற்று வரும் பொள்ளாச்சி - பாலக்காடு அகல ரயில்பாதை பணிகள் எப்போது முடிவடையும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

Updated On : 6 டிசம்பர், 2013 at 1:52 AM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:37 AM

நீண்ட காலமாக நடைபெற்று வரும் பொள்ளாச்சி - பாலக்காடு அகல ரயில்பாதை பணிகள் எப்போது முடிவடையும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

திண்டுக்கல் - போத்தனூர் அகல ரயில்பாதை திட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதற்காக ரூ. 557 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி - பழனி பாதையில் 62 கி.மீ. தொலைவிற்கும், பொள்ளாச்சி - போத்தனுôர் பாதையில் 40 கி.மீ. தொலைவிற்கும், பொள்ளாச்சி - பாலக்காடு பாதையில் 55 கி.மீ. தொலைவிற்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணிகள் கடந்த 2009-ஆம் ஆண்டு துவங்கி நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், இன்னும் பணிகள் நிறைவடைந்தபாடில்லை. இதே ஆண்டில் துவங்கப்பட்ட பழனி - திண்டுக்கல் ரயில்பாதை பணி நிறைவடைந்து, தற்போது ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

பொள்ளாச்சி - பழனி அகல ரயில்பாதை பணிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே 90 சதவீதம் முடிக்கப்பட்டு, விரைவில் வெள்ளோட்டம் விடப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் தற்போது வரை மீதமுள்ள 10 சதவீதம் பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதேபோல், பொள்ளாச்சி - போத்தனூர் வழித்தடப் பணிகள் தற்போது வரை நான்கு ஆண்டுகளாக இழுபறியாகி 60 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளன. பொள்ளாச்சி - பாலக்காடு ரயில்பாதை பணிகள் 50 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வழித்தடங்களில் பணிகள் விரைவாக நடப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், பணிகள் நடைபெறும் வழித்தடங்களில் செடிகள், மரங்கள் வளர்ந்து வனப் பகுதி போல் காட்சியளிப்பதைப் பார்த்தாலே பணியின் மந்தமான வேகத்தைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

பொள்ளாச்சி - டாப்சிலிப் ரோட்டில் சுப்பேகவுண்டன்புதுôர் என்ற இடத்தில் இந்த ரயில்பாதை குறுக்கிடுகிறது. அகல ரயில்பாதைப் பணிக்காக இந்த இடத்தில் தார் ரோட்டில் 8 அடி ஆழமான பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்தப் பள்ளத்தில் 1.5 ஆண்டில் மட்டும் 100-க்கு அதிகமான விபத்துகள் நடந்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். பணியையும் முடிக்காமல், பள்ளத்தையும் மூடாமல் இருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதேபோல, பொள்ளாச்சி - பாலக்காடு, பொள்ளாச்சி - போத்தனூர் வழித்தடங்களில் 4 ஆண்டுகள் பணிகள் நடைபெற்றும் கிட்டத்தட்ட 50 சதவீதப் பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன.

நிலப் பரப்பின் தன்மை, பாலங்கள் கட்டுவது என பணிகளில் சில சிக்கல்கள் இருந்தாலும், பணியை ஜவ்வாக இழுக்காமல் விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

குறிப்பாக கேரளாவில் இருந்து தமிழகத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த அகல ரயில்பாதை திட்டம் விரைந்து முடிக்கப்பட்டால் பக்தர்களுக்கு பயணம் எளிமையாக அமையும்.

இதுகுறித்து, திட்டத்தின் துணைத் தலைமைப் பொறியாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், பணிகள் நடைபெற்று வருகின்றன; விரைவில் முடிவடையும் என்றார்.

கடந்த மாதம் பொள்ளாச்சி எம்.பி. சுகுமார், பொள்ளாச்சி - பழனி ரயில்பாதையை ஆய்வு செய்த பின், இந்தத் திட்டத்தில் தற்போது பணிகள் நிறைவடைய கூடுதலாக ரூ. 40 கோடி தேவை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.