முகப்பு
தமிழ்நாடு

அதிகக் கட்டணம்: கட்டடங்கள் கட்ட அனுமதி பெறுவதில் சிக்கல்

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் அனுமதி பெறப்படாத கட்டடங்களில்

Updated On : 12 பிப்ரவரி, 2013 at 2:09 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:58 PM

கட்டமைப்பு மற்றும் சிறப்புத் தன்மை கட்டணம் (Infrastructure and Amenities) அதிகமாக வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதைத் தவிர்க்க, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கட்டட அனுமதி இல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி கட்டடங்கள் கட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் அனுமதி பெறப்படாத கட்டடங்களில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. அரசாணையை அதிகாரிகள் சரியாக புரிந்துகொள்ளாமல் வழிகாட்டுதல் மதிப்பை உயர்த்தி கட்டணம் விதிப்பதால், அனுமதி பெற யாரும் முன்வருவதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டடங்கள் அரசின் அனுமதி பெற்று, அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே கட்ட வேண்டும் என்பது விதி. ஆனால் நடைமுறையில் யாரும் பின்பற்றுவதில்லை எனவும் கூறுகின்றனர்.

Advertisement

பாதுகாப்பு, அடிப்படை வசதி தன்மையின் அடிப்படையில், பள்ளி மற்றும் கல்லூரி, மருத்துவமனை, விடுதி, வணிக வளாகம் உள்ளிட்ட கட்டடங்களின் அமைப்புகள் மாறுபடுகிறது. இவை அனைத்தும் அரசின் அனுமதி பெற்றே கட்டப்பட வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனேக கட்டடங்கள் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி கட்டடங்கள் அரசின் அனுமதியின்றி கட்டப்பட்டு இயங்கிவருவதாக புகார் எழுந்துள்ளது.  குறுகிய இடத்தில் தீப்பெட்டியை அடுக்கி வைத்ததுபோல் மாடி மீது மாடி கட்டி வகுப்பறைகளை அமைத்துள்ளனர். 

விபத்து காலத்தில் வெளியேறுவதற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லை. அனுமதி இல்லாத வகுப்பறை கட்டடங்களில்தான் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் என்பதும் இங்குள்ள அதிகாரிகளுக்கு தெரியும்.

இதுகுறித்து விசாரித்ததில், அனுமதி பெற்று கட்டடம் கட்ட வேண்டும் என்ற நிலையை மக்கள் பின்பற்றுவதில்லை. மேலும் அரசாணையில் கூறப்பட்டுள்ள ஷரத்துகளை அதிகாரிகள் புரிந்துகொள்ளாததாலும், புரிந்துகொண்ட அதிகாரிகளும் நமக்கேன் வம்பு என்றும் ஒதுங்கிக் கொள்கின்றனர்.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கல்வி நிலையக் கட்டடத்தை (ஐய்ள்ற்ண்ற்ன்ற்ண்ர்ய்ஹப் ஆன்ண்ப்க்ண்ய்ஞ்) சிறப்பு கட்டடத்துடன் (நல்ங்ஸ்ரீண்ஹப் ஆன்ண்ப்க்ண்ய்ஞ்) உடன் சேர்த்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.  சி.எம்.டி.ஏ. அனுமதி விவரத்தில் ஐய்க்ன்ள்ற்ழ்ண்ஹப் ஹய்க் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ண்ர்ய்ஹப் என்ற தலைப்பில் பள்ளிக் கட்டடத்துக்கு அனுமதி உள்ளது.

ஆனால் சிறப்புக் கட்டடம் என்ற தலைப்பில் பள்ளிக் கட்டடம் குறித்து இல்லை. இதை சி.எம்.டி.ஏ. பின்பற்றும்போது இதர இடத்தில் ஏன் பின்பற்றுவதில்லை என கட்டடம் கட்டுவோர் கேள்வி எழுப்புகின்றனர். 2012-ல் அரசு நில மதிப்பு வழிகாட்டியில் 50 சதவீதம் உயர்த்தியதால், கட்டமைப்பு மற்றும் சிறப்புத் தன்மை கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. இவை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம்.

கட்டமைப்பு மற்றும் சிறப்புத் தன்மை கட்டணம் அட்டவணையில், சென்னை, செங்கல்பட்டு ஏரியாக்களுக்கு ஒரு கட்டணமும், கோவை, திருப்பூர் போன்ற ஏரியாக்களுக்கு சற்று குறைந்தக் கட்டணமும், இதர ஏரியாக்களுக்கு ஒரு கட்டணமும் விதிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணம் ஏரியாவாரியாக குறிப்பிட்டுள்ளதே தவிர மண்டலம் (தங்ஞ்ண்ர்ய்ஹப்) முழுவதற்கும் அல்ல.

செங்கல்பட்டு ஏரியாவில் கடலூர், விழுப்புரம், திண்டிவனம் போன்ற மிகவும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ப்பது எந்தவிதத்தில் நியாயம் இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கோவை, திருப்பூரைவிட கடலூர், விழுப்புரம், திண்டினம் நில மதிப்பு அதிகம் உள்ள பகுதியா என்ற கேள்வி எழுகிறது. சென்னைக்கு சமமாகக் கட்டணம் நிர்ணயிப்பது எந்த வகையில் பொருந்தும் என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அரசாணை தயாரித்தவர்கள் நுணுக்கமாக ஏரியா என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். செங்கல்பட்டு மண்டலம் எனக் குறிப்பிடவே இல்லை. கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஏரியாக்கள், பிற ஏரியாக்கள் என்ற பட்டியலில் சாரும்.

இந்த குறைகள் தீர்க்கப்படுமாயின் அனைவரும் அரசு அனுமதி பெற்று கட்டடங்களை கட்டுவர். வங்கிக் கடனும் எளிதில் கிடைக்கும் எனக் கூறியவர்கள், அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல்களைக் களைய சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.