தமிழ்நாடு

தமிழக விஞ்ஞானிக்கு தேசிய விருது

கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பாவுக்கு இந்திய மக்கள்தொடர்பு கவுன்சில் சார்பில்

தினமணி

கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பாவுக்கு இந்திய மக்கள்தொடர்பு கவுன்சில் சார்பில் தேசிய விருது அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்கள்தொடர்பு கவுன்சில் சார்பில் 7-வது சர்வதேச தகவல் தொடர்பு மாநாடு ஆந்திர தலைநகர் ஹைதராபாதில் அண்மையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி ஜெ.டேனியல் செல்லப்பாவுக்கு சிறந்த மக்கள் தொடர்பு பணி சேவைக்கான தேசிய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்திய தேர்தல் கமிஷனர் எச்.எஸ். பிரம்மா இந்த விருதை வழங்கி கெüரவித்தார். விழாவில், ஆந்திர மாநில முன்னாள் சிறப்பு தலைமைச் செயலாளர் ஏ.கே.கோயல், பேராசிரியர் அருண் திவாரி உள்பட பலர் பங்கேற்றனர்.

பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானியான டேனியல் செல்லப்பா, இந்திய அணுசக்தி துறையில் 1984-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அணு உலைக்குப் பயன்படுத்தப்படும் பிரத்யேக யுரேனியம்-புளூட்டோனியம் கலந்த கார்பைடு எரிபொருளை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார்.

அணுசக்தி குறித்து நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT