முகப்பு
தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு தலைவர் பதவி: கனிமொழி மகிழ்ச்சி

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி தருவது அவருடைய சகோதரியான எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி தருவது அவருடைய சகோதரியான எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.

சமுதாயத்துக்கு என் ஆயுள் உள்ளவரை பாடுபடுவேன். எனக்குப் பிறகு ஸ்டாலின்தான். அவரை மறந்துவிடாதீர்கள் என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கருணாநிதி பேசினார்.

இந் நிலையில், சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில் கனிமொழி தன் பிறந்த நாளை சனிக்கிழமை கொண்டாடினார். அப்போது அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்று அப்பா (கருணாநிதி) கூறியிருக்கிறார். ஸ்டாலினின் சகோதரி என்ற அடிப்படையில் எனக்கு அது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மக்களவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெறுவோம் என்றார் அவர்.

கருணாநிதியின் கருத்து தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மு.க.அழகிரி, "திமுக ஒன்றும் மடம் அல்ல. தலைவர் பதவிக்கான தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறும்' என்று தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →