முகப்பு
தமிழ்நாடு

காவிரி மேலாண்மை வாரியம் அவசியம்: ஜி.கே. வாசன்

டெல்டா மாவட்டங்களில் உள்ள சூழ்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அவசியம் அமைக்கப்பட வேண்டும் என்றார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன்.

Updated On : 13 மே 2013, 1:44 am IST
பகிர்:

டெல்டா மாவட்டங்களில் உள்ள சூழ்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அவசியம் அமைக்கப்பட வேண்டும் என்றார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: உச்ச நீதிமன்ற ஆணையின்படி ஒரு குழுவை அமைக்கக்கூடிய சூழ்நிலை இருந்தாலும்கூட தண்ணீர் மிகவும் தேவையாக இருக்கிறது. சாகுபடிக்கு என்ன செய்வது என்ற கேள்விக்குறியில் டெல்டா மாவட்ட விவசாயிகள் உள்ளனர். டெல்டா மாவட்டங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலை உள்ளதால் காவிரி மேலாண்மை வாரியம் மிகவும் அவசியமாக இருக்கிறது. இதுவே விவசாயிகளின் எண்ணமாக உள்ளது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

அத்தகைய நல்ல நிலையை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி மீண்டும் அவர்களுக்கு தண்ணீர்ப் பிரச்னை வராத சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

கர்நாடக மாநிலத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி நிச்சயம் விவசாயிகளின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு நியாயத்தின் அடிப்படையில் செயல்படும். மேலும், தமிழகத்துக்கு குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் செயல்படும் என நம்புகிறேன் என்றார் வாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.