முகப்பு
தமிழ்நாடு

புதர்களின் மத்தியில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம்

பொன்னேரியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தைச் சுற்றிலும் புதர்மண்டி கிடப்பதால் அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருந்து அப்பகுதிவாசிகளை அவ்வபோது அச்சப்பட வைக்கின்றன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

பொன்னேரியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தைச் சுற்றிலும் புதர்மண்டி கிடப்பதால் அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருந்து அப்பகுதிவாசிகளை அவ்வபோது அச்சப்பட வைக்கின்றன.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள வேண்பாக்கம் பகுதியில் 1 ஏக்கர் பரப்பளவில் மின்சார வாரியத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது.

இங்கு பொன்னேரி துணை மின் நிலையம், மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும் அலுவலகக் கட்டடம் மற்றும் அங்கு பணிபுரிபவர்களுக்கான குடியிருப்புகள் அமைந்துள்ளன.

இங்குள்ள மின்வாரியத்துக்குச் சொந்தமான இடத்தைச் சுற்றிலும் இதுவரை சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை.

இங்குள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தின்கீழ் மாதர்பாக்கம், துரைநல்லூர், இருளிப்பட்டு, கும்மிடிபூண்டி, தேவம்பட்டு, மெதூர் உள்ளிட்ட பகுதிகளில் துணை மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அருகில் பயன்பாடின்றி 2 மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர்த் தொட்டிகள் மற்றும் பாழடைந்த நிலையிலான கட்டடம் ஆகியவை அமைந்துள்ளன.

அத்துடன் அங்குள்ள மின்வாரியத் தொழிலாளர் குடியிருப்புகள் பராமரிப்பின்றி உள்ளன. மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தைச் சுற்றிலும் மண்டி கிடக்கும் புதர்கள், அங்கு பாழடைந்த நிலையில் பயன்பாடின்றி கிடக்கும் கட்டடம் காரணமாக அப்பகுதிக்கு பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அத்துடன் இங்குள்ள புதர்களில் குடியிருந்து வரும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அவ்வபோது வெளியே வந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களை அச்சம் அடைய செய்கின்றன.

எனவே பொன்னேரியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தைச் சுற்றிலும் உள்ள புதர்கள் மற்றும் அங்கு பயன்பாடின்றி இருக்கும் நீர்தேக்கத் தொட்டி உள்ளிட்ட கட்டடங்களை அகற்றவும், பாதுகாப்பாற்ற நிலையில் உள்ள அப்பகுதியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கவும், இரவு நேரத்தில் மின்வாரிய வளாகம் முழுவதும் வெளிச்சத்தில் இருக்கும் வகையில் அங்கு விளக்குகளை அமைக்க மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →