முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணன்கோவில் காவல் ஆய்வாளர் சி.சின்னப்பாண்டி காலமானார்

வியாழக்கிழமை இரவுப் பணிக்காக தாணிப்பாறை சதுரகிரி மலைக்குச் சென்ற அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் மதுரை

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:31 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டம், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சி.சின்னப்பாண்டி (54) (படம்) சனிக்கிழமை இரவு காலமானார்.

வியாழக்கிழமை இரவுப் பணிக்காக தாணிப்பாறை சதுரகிரி மலைக்குச் சென்ற அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தி்ல் 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அவருக்கு மனைவியும் மூன்னறை வயதில் பெண் குழந்தையும் உண்டு.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் உள்பட போலீஸார் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

இவரது இறுதிச் சடங்கு திண்டுக்கல் மாவட்டம், வீருவீடு அருகேயுள்ள வத்தல்பட்டியில் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →