முகப்பு
தமிழ்நாடு

நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: ஒரே நாளில் சேர்வலாறு அணை நீர்மட்டம் 25 அடி உயர்ந்தது

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:34 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. ஒரே நாளில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 25 அடி உயர்ந்தது. சனிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கும் நிலையில் இருந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 75 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 48 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 30 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 19.8 மி.மீ மழையும், ராமநதி அணையில் 17 மி.மீ மழையும், கருப்பாநதி அணையில் 6 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 31 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 3 மி.மீ மழையும், வடக்கு பச்சையாறு அணையில் 29.2 மி.மீ மழையும், கொடுமுடியாறு அணையில் 30 மி.மீ மழையும் பெய்துள்ளது.

100 அடியை நெருங்கிறது: நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. 481 கனஅடி வந்து கொண்டிருந்த பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 6,000 கனஅடியும், சேர்வலாறு அணையின் நீர்வரத்து 8,000 கனடியாகவும் இருந்தது.

நீர்வரத்து கணிசமாக அதிகரித்ததை அடுத்து நீர்மட்டம் 69.72 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்ந்து சனிக்கிழமை காலை நிலவரப்படி 94.49 அடியாக இருந்தது. பிற்பகல் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கும் நிலையில் இருந்தது.
நீர்மட்டம் உயர்ந்தது:

முழு கட்டுரையைப் படிக்க →