முகப்பு
தமிழ்நாடு

கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னை: பலனளிக்காத சுங்கத்துறையின் புதிய நடைமுறை

சென்னைத் துறைமுகத்தில் நிலவும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காக சுங்கத் துறை ஜூலை 1 இல் அமல்படுத்திய புதிய நடைமுறையால் பிரச்னை சிறிது கூட குறையவில்லை. இப்புதிய நடைமுறை தொடருமெனில் ஏற்றுமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

சென்னைத் துறைமுகத்தில் நிலவும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காக சுங்கத் துறை ஜூலை 1 இல் அமல்படுத்திய புதிய நடைமுறையால் பிரச்னை சிறிது கூட குறையவில்லை. இப்புதிய நடைமுறை தொடருமெனில் ஏற்றுமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. கடந்த 2011-ல் சுங்கத்துறை அறிவித்த புதிய விதிமுறையால் ஒரே சரக்கு ஒரே துறையால் இரண்டு இடங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நடைமுறைக்கு ஒத்துவராத இப்புதிய அறிவிப்பினால் குளறுபடி ஏற்பட்டு கண்டெய்னர் லாரிகள் இரண்டு இடங்களில் வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் துறைமுகம் சென்றடைய 2 நாள்கள் வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

இதனால் தினமும் சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு லாரிகள் வரிசை கட்டி நிற்கும் நிலை உள்ளது. எண்ணூர் விரைவு சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தியும் இப்பிரச்னை தொடர்ந்து வருகிறது.

புதிய நடைமுறை அறிமுகம்: இந்நிலையில் சென்னை சுங்கத்துறை கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியது. இதன்படி ஏற்றிமதிக்காக வரும் சரக்குகள் நேரடியாக துறைமுகத்திற்கு செல்ல முடியாது. மாறாக ஏதாவது ஒரு சரக்குப் பெட்டக நிலையத்தில் (இஊந- இர்ய்ற்ஹண்ய்ங்ழ் ஊழ்ங்ண்ஞ்ட்ற் நற்ஹற்ண்ர்ய்) இறக்கிப் போட வேண்டும். இங்கு மீண்டும் ஆவண பரிசோதனை முடிந்ததும் சரக்குப் பெட்டக மையத்தினரே துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்வார்கள். இதன் மூலம் உரிய ஆவணங்கள் இன்றி வரும் கண்டெய்னர் லாரிகள் வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும். இதனையடுத்து நெரிசல் குறையும். பிரச்னை தீரும் என்று கருதப்பட்டது. இந்த முடிவு துறைமுக உபயோகிப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு.

இந்த நடைமுறை 3 மாதங்களுக்குச் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என சுங்கத் துறை அறிவித்தது. ஆனால் இது நடைமுறைக்கு வந்த முதல்நாளே கண்டெய்னர் லாரிகள் வழக்கத்தைவிட நீண்ட வரிசையில் நின்றன.

ஏற்றுமதி முடங்கும் அபாயம்: இப்புதிய நடைமுறை குறித்து ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது: சுங்கத்துறையும், துறைமுக நிர்வாகமும் ஏற்றுமதியைப் பற்றி கவலையின்றி தன்னிச்சையாக அவ்வப்போது புதிய நடைமுறைகளை அறிவிக்கின்றனர்.

கண்டெய்னர் போக்குவரத்து பிரச்னை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இதனால் வாடகை உள்ளிட்ட செலவினங்கள் அதிகரித்துள்ளன. மேலும் குறித்த நேரத்திற்குள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு சரக்குகள் சென்றடைவதில் காலதாமதம் ஆகிறது. இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறை சரக்குப் பெட்டக நிலையங்களுக்கு மட்டுமே லாபகரமாக இருக்கும்.

பலமுறை கையாளும் கொள்கை:மேலும் ஏற்றுமதி ஏற்பாட்டிற்கான கால வரம்பு அதிகரிக்கும். சரக்குகளை குறித்த நேரத்திற்குள் துறைமுகத்திற்கு கொண்டு செல்ல முடியாது.

இந்த புதிய முறையால் செலவினங்கள் அதிகரிக்கும். இது தொடருமெனில் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும்.

இதே நிலை தொடர்ந்தால் ஏற்றுமதியாளர்கள் சென்னைத் துறைமுகத்தை தவிர்த்து வேறு துறைமுகத்தை நாடுவார்கள் என்று கூறினர்.

முழு கட்டுரையைப் படிக்க →