தமிழ்நாடு

சொத்துக்காக தாயை கொலை செய்த  மகள் கைது

சின்னமனூர் அடுத்த ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் சொத்துக்காக பெற்றத்தாயை துப்பட்டாவால் கொலைசெய்த பெண்மணியை உத்தமபாளையம் மகளீர் காவல்நிலைய

சந்திரசேகரன்

சின்னமனூர் அடுத்த ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் சொத்துக்காக பெற்றத்தாயை துப்பட்டாவால் கொலைசெய்த பெண்மணியை உத்தமபாளையம் மகளீர் காவல்நிலைய ஆய்வாளர் புதன்கிழமை  கைது செய்தார்.

   ஓடைப்பட்டி சமத்தவபுரம் நடுத்தெருவைச்சேர்ந்தவர் கல்யாணிலட்சுமி(75),இவருக்கு 4 மகள் உள்ளனர்.தற்போது கடைசி மகள் ஜீவா(35) என்வருடன் சமத்துவபுரத்தில் கல்யாணிலட்சுமி வசித்து வந்துள்ளார்.இந்நிலையில், கல்யாணிலட்சுக்கு   சமத்துவபுரத்தில் 2  வீடுகள் இருப்பதாகவும் இதில் ஒன்றை பேரையூரில் வசிக்கும்  மூத்தமகளான வள்ளியம்மாளுக்கு எழுதி கொடுத்துவிட்டாராம். 

   இதனிடையே ஜீவா மற்றொரு வீட்டை தன் பெயரில் எழுதிவைக்கும் படி தன் தாயியை வற்புறுத்தி வந்த நிலையில் கல்யாணிலட்சுமியும் சரி எனக்கூறினாராம்.

இந்நிலையில் கல்யாணிலட்சுமி பேரையூரில் இருக்கும் மூத்தமகள் வள்ளியம்மாள் வீட்டிற்கு செல்லப்போவாத கூறியதை ஜீவா தடுத்துள்ளார்,ஆனால் கல்யாணிலட்சுமி  பேரையூர் செல்வதில் உறுதியாக இருந்துள்ளார்.

    தனது தாய் பேரையூர்  சென்றால் தற்போது கிடைத்துள்ள சொத்து கிடைக்காமல் போகிவிடுமோ என நினைத்த ஜீவா துப்பட்டாவால் தனது தாயின் கழுத்தை இறுக்கியுள்ளார். அங்கம் பக்கத்தில் இருந்தவர்கள்   சத்தத்தை   கேட்டு வந்தவர்கள்,கல்யாணிலட்சுமி அங்கிருந்து மீட்டு சின்னமனூர் அரசு மருத்தவனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

   புகாரின் பேரில்  ஓடைப்பட்டி போலீஸார் வழக்குபதிவுசெய்ததை அடுத்து உத்தமபாளையம் மகளீர் காவல்நிலைய ஆய்வாளர் ஜீவாவை கைது செய்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

7வது நாளில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு! பெங்களூரிலிருந்து 127 விமானங்கள் ரத்து

தமிழகத்தில் ஹிந்து தர்மத்தை பின்பற்ற சட்டப் போராட்டம் நடத்தும் நிலை! பவன் கல்யாண்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்பு

தங்கம் விலை எவ்வளவு? இன்றைய நிலவரம்!

விடியற்காலையில் நிலவும் கடும் பனி மூட்டம்! வேலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

SCROLL FOR NEXT