முகப்பு
தமிழ்நாடு

நெல்லையில் ஆன்-லைன் நிறுவனம் மூலம் பணம் மோசடி: இளைஞர் கைது

பெருமாள்புரம் ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (61). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவர், யுனிக்யூ கன்சல்டன்சி அன்டு டிரைடிங் பிரைவேட் லிட் என்ற ஆன் லைன் நிறுவனத்தின்

Updated On : 18 ஜூலை, 2014 at 6:33 PM
பகிர்:

பாளையங்கோட்டையில் ஆன்-லைன் முறையில் நிறுவனம் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது:

பெருமாள்புரம் ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (61). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவர், யுனிக்யூ கன்சல்டன்சி அன்டு டிரைடிங் பிரைவேட் லிட் என்ற ஆன் லைன் நிறுவனத்தின் திட்டங்களால் கவரப்பட்டு ரூ.8 லட்சம் செலுத்தினாராம். ஆனால் திட்டங்களில் கூறியபடி அந்த நிறுவனம் செயல்படாததோடு, பணத்தையும் மோசடி செய்வதாக பாளையங்கோட்டை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

Advertisement

அதன்பேரில் விசாரணை நடத்தியதில் அந்த நிறுவனத்தால் மேலும் சிலர் ரூ.26 லட்சம் வரை இழந்திருப்பதாக தெரியவந்தது.. இந்த மோசடிகள் தொடர்பாக நிறுவனத்தின் இயக்குநரான, வடக்குஅரியநாயகிபுரத்தைச் சேர்ந்த பிச்சாண்டி மகன் சண்முககணேசனை (34), பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் முத்தையா தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மேலும், இவ் வழக்கு தொடர்பாக 3 பேரை தேடி வருகிறார்கள். இந்த தனியார் ஆன்-லைன் நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் முறைப்படி புகார் அளிக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.