முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா: முதியோர் இல்லத்தில் மதியஉணவு

சிதம்பரம் நகரில் தெற்குவாணியத்தெரு, மண்வெட்டி பக்கிரி சந்து, மேலவீதி அண்ணாசிலை அருகே, அண்ணாகுளம் புறவழிச்சாலை ஆகிய இடங்களில் திமுக கொடியினை நகரச் செயலாளர் கே.ஆர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

சிதம்பரம் நகர திமுக சார்பில் திமுக தலைவர் மு.கருணாநிதி 91-வது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

சிதம்பரம் நகரில் தெற்குவாணியத்தெரு, மண்வெட்டி பக்கிரி சந்து, மேலவீதி அண்ணாசிலை அருகே, அண்ணாகுளம் புறவழிச்சாலை ஆகிய இடங்களில் திமுக கொடியினை நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் ஏற்றினார். பின்னர் புறவழிச்சாலையில் உள்ள ஆதரவற்றறோர் முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் தென்னவன் ஆறுமுகம், மாவட்ட கலை, இலக்கியப்பிரிவு அமைப்பாளர் த.ஜேம்ஸ்விஜயராகவன், மாவட்ட பிரதிநிதி த.செல்வம், நகர துணைச் செயலாளர் பன்னீர்செல்வம், பாலு, நகர இளைஞரணி அமைப்பாளர் மக்கள் அருள், உத்திராபதி, நகரமன்ற உறுப்பினர்கள் அப்புசந்திரசேகரன், ரா.வெங்கடேசன், ஏஆர்சி.மணிகண்டன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ராஜராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.