முகப்பு
தமிழ்நாடு

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் போனஸ் பிரச்னை: தொழிலாளர் நீதிமன்றத்தில் ஜூலை 1-ல் விசாரணை

நெய்வேலி என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்குவது குறித்து வரும் ஜூலை 1ஆம் தேதி சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில்

Updated On : 24 ஜூன், 2014 at 3:00 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:11 AM

நெய்வேலி என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்குவது குறித்து வரும் ஜூலை 1ஆம் தேதி சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

 இதுகுறித்து என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடேசன் வெளியிட்ட செய்தி: நெய்வேலி என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு 2011-2012ஆம் ஆண்டிற்கான 20 சதவீத போனஸ் வழங்கக்கோரும் பிரச்னை தொடர்பாக ஏஐடியுசி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் உதவி தொழிலாளர் ஆணையர் முன்பு ப சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது.

 இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.  இதையடுத்து இதுதொடர்பான அறிக்கை, உதவி தொழிலாளர் நல ஆணையரால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

 அதன் அடிப்படையில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் 20 சதவீத போனஸ் கோரிக்கை தொடர்பாக விசாரணை நடத்தி தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு தொழிலாளர் நல நீதிமன்றத்திற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

 இதுதொடர்பான விசாரணை வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஏஐடியுசி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை மத்திய தொழிலாளர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.