முகப்பு
தமிழ்நாடு

கீழணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்து விட உழவர் முன்னணி கோரிக்கை

இதுகுறித்து தமிழக உழவர் முன்னணி செயலாளர் சி.ஆறுமுகம், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: 4-9-2014 அன்று சம்பா சாகுபடிக்கு நீர் திறந்துவிடுவது குறித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:43 AM
பகிர்:

கீழணையிலிருந்து உடனடியாக சம்பா சாகுபடி மேற்கொள்ள பாசனத்திற்கு நீர் திறந்து விட வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக உழவர் முன்னணி செயலாளர் சி.ஆறுமுகம், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: 4-9-2014 அன்று சம்பா சாகுபடிக்கு நீர் திறந்துவிடுவது குறித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதிகாரிகளிடம் நேரடி நெல்விதைப்பு முறையில் விதைக்கப்பட்ட நெல் அரைகுறையாக பெய்யும் மழையினால் சரிவர முளைக்காமல் பாதிக்கப்பட்டிருப்பதால், உடனடியாக நீர் திறந்து விட வேண்டும் என அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளும் ஒருமனதாக கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் கீழணையில் செப்.7-ம் தேதி ஆய்வு செய்த பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.அசோகன் கீழணை நிரம்பியுள்ளதாலும், வீராணம்ஏரி நிரம்பும் நிலையில் உள்ளதாலும், இன்னும் 10 நாட்களில் முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோரின் அனுமதி பெற்று நீர் திறந்துவிடப்பட்டு என தெரிவித்துள்ளார். இச்செய்தி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே குறுவை சாகுபடியை இழந்துள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள காவிரி டெல்டா கடை, மடை பகுதி விவசாயிகள், போதிய மழை இல்லாததால் சம்பா நேரடி விதைப்பையும் இழக்கும் நிலையில் உள்ளனர். உடனடியாக நீர் திறக்கப்படாவிடில் அரைகுறையாக முளைத்துள்ள நெல் முழுமையாக சேதமடையும். எனவே தமிழக முதல்வர் இச்சிக்கலில் தலையிட்டு சம்பா நேரடி விதைப்பை காக்க உடனடியாக நீர் திறந்துவிட ஆணை பிறப்பிக்க வேண்டும் என கடிதத்தில் சி.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.