முகப்பு
தமிழ்நாடு

பென்னிங்டன் மார்க்கெட் கடைகளுக்குள் நீர் புகும் நிலை: கழிவுநீர் பாதையை சுத்தம் செய்ய கோரிக்கை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், பென்னிங்டன் மார்க்கெட்டுக்குள் லேசான சாரல் மழைக்கு கூட நீர் சூழ்ந்து விடுவதால், பொதுமக்கள் உள்ளே கடைகளுக்குச் சென்று சரக்குகள் வாங்கவதற்கு

தமிழ்நாடு

பென்னிங்டன் மார்க்கெட் கடைகளுக்குள் நீர் புகும் நிலை: கழிவுநீர் பாதையை சுத்தம் செய்ய கோரிக்கை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், பென்னிங்டன் மார்க்கெட்டுக்குள் லேசான சாரல் மழைக்கு கூட நீர் சூழ்ந்து விடுவதால், பொதுமக்கள் உள்ளே கடைகளுக்குச் சென்று சரக்குகள் வாங்கவதற்கு

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:51 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், பென்னிங்டன் மார்க்கெட்டுக்குள் லேசான சாரல் மழைக்கு கூட நீர் சூழ்ந்து விடுவதால், பொதுமக்கள் உள்ளே கடைகளுக்குச் சென்று சரக்குகள் வாங்கவதற்கு மிகுந்த சிரமப்படுகிறார்கள். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் நிலையும் உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே பென்னிங்டன் கமிட்டிக்குச் சொந்தமான 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. நகர் மக்களின் அன்றாடத் தேவையான காய்கறிகளை வாங்கும் மார்க்கெட் கடைகள் உள்ளிட்ட பல கடைகள் இதனுள் உள்ளது. இந்த மார்க்கெட் தளம், வெளியேயுள்ள சாத்தூர் சாலை மேடாக உள்ளது. மேலும் மார்க்கெட்டின் கிழக்குப் பக்கம் உள்ள கழிவு நீர் பாதையை ஆக்கிரமித்து பல திடீர் கடைகள் ஏற்பட்டுள்ளதால், சாத்தூர் சாலையில் வரும் மழை நீர் நேரடியாக மார்க்கெட்டுக்குள் புகுந்து விடுகிறது. செவ்வாய்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த சாரல் மழைக்கு மார்க்கெட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இது குறித்து பென்னிங்டன் மார்க்கெட் வளாக கடைகளில் வணிகம் செய்யும் வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் பி.கே.எஸ்.ஞானம், புதன்கிழமை கூறியதாவது:

மார்க்கெட்டுக்குள் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக, இந்தப் பகுதியின் சுகாதரப்பணியை நகராட்சி சார்பில் மேற்கொள்ளும் எக்ஸ்னோரா அமைப்பிற்கு மாதம் ரூ.7500 கொடுக்கிறோம். கடந்த ஒரு மாத்திற்கு மேலாக, எக்ஸ்னோரா அமைப்பின் பொறுப்பாளரிடம் மார்க்கெட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கழிவு நீர் பாதையை தூர்வார கூறிக்கொண்டே உள்ளேன். ஆனால் துப்புரவுப் பணிகள் நடைபெறவில்லை. கழிவுநீர் பாதையை தூர்வாரி, முறைப்படி கழிவுகளை அள்ளினாலே மார்க்கெட்டுக்குள் தண்ணீர் புகுவது நின்றுவிடும். இதே நிலை நீடித்து மழை சற்று பலமாக பெய்தால், மார்க்கெட் கடைகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.

மாவட்ட நிர்வாகம் இது விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் நலன் காக்கும் வகையில் வெளியேயுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக கழிவு நீர் பாதையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →