முகப்பு
தமிழ்நாடு

ஏரி வாய்க்காலை தூர் வாரக்கோரி : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு

ஏரி, வாய்க்கால்களை தூர்வாரக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:04 AM
பகிர்:

ஏரி, வாய்க்கால்களை தூர்வாரக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியக்குழுக் கூட்டம் புவனகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் அமிர்தலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மாதவன், புவனகிரி ஒன்றியச் செயலாளர் கோவிந்தராசு, தலைவர் பாலமுருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜாகீர்உசேன், நாகப்பன், ரவி, சம்பத், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஜிப்பான் ஏரியை தூர் வார வலியுறுத்தியும், மஞ்சகொல்லை-உளுத்தூர் சாலையை செப்பணியிட்டு கிளை வாய்க்கால்களை தூர் வார வலியுறுத்தி ஏப்.23 ம் தேதி விருத்தாச்சலம்-புவனகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மஞ்சகொல்லை என்ற இடத்தில் சாலைமறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.