காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் புதிய முல்லையாறு பாலம் கட்ட ஏற்பாடு
காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலையில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான பாலத்தை இடித்து, ரூ.2.50 கோடியில் புதிய பாலம்
காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலையில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான பாலத்தை இடித்து, ரூ.2.50 கோடியில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
காரைக்கால் மாவட்டத்தில், புதுச்சேரி அரசின் முயற்சியால் தேசிய நெடுஞ்சாலைத்துறை நிதியில், பல பாலங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.
முல்லையாறு பாலம் மட்டுமே மேற்கண்ட பாலங்கள் வரிசையில் சிறியதாகும். பாலம் குறுகியதாக இருப்பதால், இப்பகுதியில் லாகன விபத்துகள் அதிகரித்துவருகின்றன.
இதுகுறித்து பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் வி.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை கூறும்போது, முல்லையாறு பாலம் ரூ.2.50 கோடியில் கட்டப்படவுள்ளது. உபயோகத்தில் இருக்கும் பாலத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய பாலம் கட்டப்படும். ஒப்பந்ததாரருக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் மணல் கொட்டப்பட்டுவருகிறது. இப்பகுதியில் தாற்காலிகமாக புறவழி அமைக்கப்படும். பிரதான போக்குவரத்துக்குரிய நெடுஞ்சாலையாக இருப்பதால், பாலம் கட்டுமானம் விரைவாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.