திருச்சி - சிங்கப்பூர் செல்ல வேண்டிய டைகர் ஏர்வேஸ் விமானப் புறப்பாடு தாமதம்
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தின் டயர் வெடித்திருந்தது, பொறியாளர்களின் சோதனையின் போது தெரிய வந்ததை அடுத்து,
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தின் டயர் வெடித்திருந்தது, பொறியாளர்களின் சோதனையின் போது தெரிய வந்ததை அடுத்து, திருச்சியில் இருந்து சிங்கப்பூர் புறப்பட வேண்டிய அந்த விமானத்தின் புறப்பாடு தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானம் மீண்டும் இரவு 10.30 மணியளவில் சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
விமானத்தில் 133 பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது விமானத்தை பொறியாளர்கள் பரிசோதனை செய்து கொண்டிருந்த போது, விமானத்தின் பின்பக்க டயர் வெடித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட பக்கத்தில் இருக்கும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இன்று காலை சாலை வழியாக டயர் கொண்டு வரப்பட்டு விமானத்தில் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.
திருச்சியில் இருந்து டைகர் ஏர்வேஸ் விமானம் இன்று மதியம் 1.30க்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.