மயிலம் கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா
திண்டிவனம் அடுத்த மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
திண்டிவனம் அடுத்த மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு கோயிலின் நடை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு வள்ளி தெய்வானையுடன் காட்சி அளித்த முருகப்பெருமானுக்கு பால்,சந்தனம், தயிர்,இளநீர்,பஞ்சாமிர்தம்,தேன் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த மூலவருக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது.ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.டிஎஸ்பி சிலம்பரசன் உத்தரவின் பேரில் மயிலம் போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் 20ம் பட்டம் குரு மகா சன்னிதானத்தின் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் செய்யப்பட்டிருந்து.
சுவாமி தரிசனம் செய்ய திண்டிவனம்,விழுப்புரம்,புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரும்திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.