திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சாலை மறியல்: 75 பேர் கைது
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி திங்கள்கிழமை சாலை மறியல் செய்த திராவிடர் விடுதலைக் கழகத்தினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி திங்கள்கிழமை சாலை மறியல் செய்த திராவிடர் விடுதலைக் கழகத்தினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுவை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும், துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் 2 வாரங்களாக போராடி வருகின்றனர். அவர்கள் மீது ரெüடிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ராஜா தியேட்டர் அருகே சாலை மறியல் நடைபெற்றது. கழகத் தலைவர் லோகு அய்யப்பன்
தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வீராசாமி, தந்தைபிரியன், அபிமன்னன், சிவானந்தம், விசயசங்கர் அன்பெழிலன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ராஜா தியேட்டர் சிக்னல் அருகே சாலை மறியல் செய்த 75 பேர் கைது செய்யப்பட்டனர். சாலை மறியலையொட்டி பெரியகடை இன்ஸ்பெக்டர் ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டருந்தது.