என்.எல்.சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக கடலூரில் ரயில் மறியல் போராட்டம்
என்.எல்.சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக கடலூரில் அனைத்துக் கட்சியினர் ரயில் மறியல் நடத்தி வருகின்றனர்.
என்.எல்.சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக கடலூரில் அனைத்துக் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேலைநிறுத்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அனைத்துக் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை நெய்வேலி
மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தலைமையில் காங்கிரஸ், பாமக, தாமக, விடுதலைச் சிறுத்தைகள்,
தேமுதிக, சிஐபியு இடது சாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சுமார் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மந்தாரகுப்பத்தில் இருந்து ரயில் நிலையத்துக்குப் பேரணியாக சென்றனர்.
இவர்களை செயல்நிலைய நுழைவுவாயிலின் அருகே போலீசார் தடுத்து நிறுத்திக் களைந்து போகச் செய்தனர். எஸ்பி விஜயகுமார் தலைமையில் ரயில்வே எஸ்பி ஆனி விஜயா, விருதாச்சலம் ஆர்.பி.சி. மோகன வடிவேலு ஆகியோர் தலைமையில் சுமார் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.