முகப்பு
தமிழ்நாடு

ஏர் ஏசியா விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல்: 142 பயணிகள் அவதி

திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு சென்ற ஏர் ஏசியா விமானத்தின் கண்ணாடி விரிசல் ஏற்பட்டதால் விமானம் நிறுத்தப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:32 AM
பகிர்:

திருச்சியில் இருந்து மலேசியாவுக்குச் சென்ற ஏர் ஏசியா விமானத்தின் கண்ணாடி விரிசல் ஏற்பட்டதால் விமானம் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் சரியான நேரத்திற்குச் சென்ற சேர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

நேற்றிரவு 10.55 மணியளவில், திருச்சியில் இருந்து மலேசியாவுக்குப் புறப்பட இருந்த ஏர் ஏசியா விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் விமானம் நிறுத்தப்பட்டு, அதிலிருந்த 142 பயணிகளை அருகில் உள்ள ஹோட்டலில் தங்க வைத்தனர். இன்று காலை சென்ற விமானத்தில் 142 பயணிகளை அனுப்பி வைத்தனர். ஜன்னல் கண்ணாடி சரிசெய்த பின்பு இன்று மாலை விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.