முகப்பு
தமிழ்நாடு

ஆரணி: மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர்; பெற்றோர் முற்றுகை

ஆரணி அடுத்த நெசல் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு திங்கள்கிழமை பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

Updated On : 21 டிசம்பர், 2015 at 5:29 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:21 PM

ஆரணி அடுத்த நெசல் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு திங்கள்கிழமை பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஹரீஷ் என்பவர் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பல்வேறு சில்மிஷங்களை செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து சில மாணவிகள் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பள்ளியில் அண்மையில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக  கூட்டம் நடைபெற்றதில் பெற்றோர்கள் அனைவரும் ஆசிரியர் ஹரீஷ் குறித்து தலைமையாசிரியை நந்தினியிடம் புகார் கூறினர். மேலும் ஆசிரியர் ஹரீஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். பள்ளி தலைமையாசிரியரும் கண்டிப்பாக மேலதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.

Advertisement

பின்னர் வழக்கம்போல் திங்கள்கிழமை பள்ளி தொடங்கியபோது ஆசிரியர் ஹரீஷ் பள்ளிக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு பள்ளிக்கு செனறு முற்றுகை செய்தனர். மேலும் ஆசிரியர் ஹரீஷை பள்ளியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.