வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளியையடுத்த கத்தாரி கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தம்பதியினர் சேகர் (45), விஜயலட்சுமி (39), இவர்களுக்கு 4 பெண் பிள்ளைகள், ஸ்ரீவித்யா (22), பிரவீனா (20), நிவேதா (17), வனிதா (15).
இவர்களில் முதல் இரண்டு பெண்களான ஸ்ரீவித்யா மற்றும் பிரவீனா காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனால் அடுத்திருந்த நிவேதா மற்றும் வனிதா காதல் திருமணம் செய்துக்கொண்டால் குடும்பமானம் போய்விடும் என்று எண்ணி நிவேதா மற்றும் வனிதாவை கை, கால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, தம்பதியினரான சேகர், விஜயலட்சுமி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த திம்மாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.