மழை பாதித்த விவசாயக் கடன்களை ரத்து செய்யக் கோரி பா.ம.க. ஆர்ப்பாட்டம்
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில பாமக சார்பில் புதன்கிழமை தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள புதுவை, காரைக்கால் விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஏரி, குளம், வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாய அணி தலைவர் பச்சைமுத்து தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெ.கோபி என்ற கோபாலகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். மாநில செய்தி தொடர்பாளர் ராஜசேகரன், ஆலோசகர் ராமகிருஷ்ணகவுண்டர், வன்னிய சங்க தலைவர் வேணுகோபால் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் செல்வராசு, வடிவேலு, ஞானசேகரன், ஞானமூர்த்தி, மாவட்ட செயலாளர் தங்கஅறிவழகன், பொருளாளர் முகமதுயூனுஸ், இளைஞரணி தலைவர் குமார், செயலாளர் ரமேஷ், தொழிற்சங்க தலைவர் இளவரசன், செயலாளர் செல்வநாதன், நகர தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் பழனிராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.