ஸ்ரீவில்லிபுத்தூர் மலைப் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதா என ஆய்வு
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதா என்று வனத்துறையினர் உள்ளிட்ட கூட்டு பாதுகாப்புக்
தமிழ்நாடுஸ்ரீவில்லிபுத்தூர் மலைப் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதா என ஆய்வு
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதா என்று வனத்துறையினர் உள்ளிட்ட கூட்டு பாதுகாப்புக்
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதா என்று வனத்துறையினர் உள்ளிட்ட கூட்டு பாதுகாப்புக் குழுவினர் 2 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, பிளவக்கல் அணைப் பகுதியில் 5 நபர்கள் ஹெல்மட் அணிந்து கொண்டு கிறிஸ்துமஸ் நேரத்தில் மலைவாழ் மக்களுக்கு இலவசமாக குடங்கள் வழங்கினார்களாம். இது குறித்து தகவல் கிடைத்து வனத் துறையினர் செல்வதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள். கிறிஸ்துமஸ்க்கு அன்பளிப்பு கொடுப்பவர்கள் ஹெல்மட் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்றும், இவர்கள் தீவிரவாதிகளாக இருப்பார்களா என்ற கோணத்திலும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் விருதுநகர் வன பாதுகாப்புப் படையின் உதவி வனப் பாதுகாவலர் ஏ.பழனிராஜ், மதுரையில் உள்ள போதைத் தடுப்பு போலீஸார் மற்றும் வன பாதுகாப்பு அதிரடிப்படையினர் என தலா 20 பேர் கொண்ட இரு குழுக்கள் ராஜபாளையம் பகுதியில் உள்ள மலை வழியே சாப்டூர் மலைப் பகுதி வரை சுமார் 60 கி.மீ. நடந்தே புதன், வியாழன்கிழமைகளில் சோதனைகளை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்தனர்.
சோதனையில் சந்தேகத்திற்கிடமான வகையில் யாரும் தென்படவில்லை என்று உதவி வனப் பாதுகாவலர் ஏ.பழனிராஜ் கூறினார்.