தமிழ்நாடு

அறுவடை செய்த நெல்லை பக்குவமாக பாதுகாத்தால் மட்டுமே கூடுதல் விலை பெறமுடியும்: வேளாண்மைத்துறை இணை இயக்குநர்

அறுவடை செய்யப்பட்ட நெல்லை பக்குவமாக பாதுகாப்பதன் மூலமே அதற்கான கூடுதல் விலையை விவசாயிகள் பெறுவதற்காக ஆலோசனைகளை வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கே.சுப்பையா

எஸ். பாண்டியன்

அறுவடை செய்யப்பட்ட நெல்லை பக்குவமாக பாதுகாப்பதன் மூலமே அதற்கான கூடுதல் விலையை விவசாயிகள் பெறுவதற்காக ஆலோசனைகளை வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கே.சுப்பையா தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டப் பகுதிகளில் இன்னும் 3 வாரங்களுக்குள் பயிரிடப்பட்ட நெல் அறுவடை பணிகள் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பது தொடர்பாக விவசாயிகள் குறிப்பிட்ட ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். விவசாயிகளின் கடின உழைப்பின் மூலமே விளைந்த நெல் மணிகளுக்கு கூடுதல் விலை கிடைப்பது என்பது அதிலுள்ள முழு அரிசியின் அடிப்படையிலேயே உள்ளது.

நெல் ரகங்களின் வயதுக்கேற்ப பயிர் அறுவடையை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும். அதேபோல், நெல் கதிரின் மணிகள் 80 சதவீதம் மஞ்சள் நிறமாக மாறி இருந்தால் மட்டுமே அறுவடை மேற்கொள்ளலாம். இதுபோன்ற காரணங்களால்  விளைநிலங்களில் நெல் உதிர்வதை தடுக்க முடியும். அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதம் 19 சதவீதம முதல் 23 சதவீதம் இருப்பது அவசியம். எனவே முதிர்ந்த நெல் மணிகளின் அரிசி கடுமையானதாகவும், உறுதியாகவும் இருக்கும். அறுவடைக்கு பின் நன்றாக சுத்தம் செய்வதோடு, அதிக சூரிய வெப்பத்திலும் உலர்த்தக் கூடாது. காயவைத்த நெல்லின் ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருத்தல் வேண்டும். அதிக ஈரப்பதத்தோடு சேமித்து வைத்தால் பூஞ்சாண வித்துக்கள் பரவுவதோடு நெல்லின் தரமும் பாதிக்கும்.

சுத்தமான கோணிப்பையில் நெல்லை நிரப்பி தரையில் மரச்சட்டங்கள் அல்லது காய்ந்த வைக்கோல் பரப்பி சுவரிவிருந்து ஒரு அடி இடைவெளி விட்டு அதன் மேல் மூடைகளை அடுக்கி வைத்தால் சுவரின் ஈரப்பதம் நெல்லை தாக்கது. மேலும், சேமிக்கப்பட்ட நெல்லில் அந்துப்பூச்சிகள் தாக்காமல் இருக்க மாலத்தியான் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 10 மில்லி என்ற அளவில் கலந்து தரையிலும், மூட்டைகள் மீதும் தெளிக்க வேண்டும். விற்பனைக்கு கொண்டு செல்லும் போது ரகங்கள் வாரியாக பிரித்து கொண்டு செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் பூச்சிகள், பூஞ்சாணங்கள தாக்கப்பட்ட நெல் மற்றும் ஈரப்பதத்தால் கெட்டுப்போன நெல்களை தனியாக பிரித்து விடுவது அவசியம் ஆகும். இது போன்ற ஆலோசனைகளை விவசாயிகள் அனைவரும் பின்பற்றுவதன் மூலம் நெல்லுக்கு அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளதாக வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT