ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் யானை சாவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் காட்டில் மின்சாரம் தாக்கியதில் பெண் யானை உயிரிழந்தது.
தமிழ்நாடுஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் யானை சாவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் காட்டில் மின்சாரம் தாக்கியதில் பெண் யானை உயிரிழந்தது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் காட்டில் மின்சாரம் தாக்கியதில் பெண் யானை உயிரிழந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம், கான்சாபுரம் பீட்-1, அத்திகோவிலில் காப்புக் காட்டை அடுத்து சுமார் அரை கி.மீ. தூரத்தில், ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான காடு உள்ளது. இந்தக் காட்டை ஒட்டி 11 கிலோ வாட் சக்தி கொண்ட மின்சார வயர் செல்கிறது. இங்குள்ள மூங்கிலை உடைப்பதற்காக, காப்புக் காட்டில் உள்ள 20-25 வயது மதிக்கத்தக்க பெண் யானை வியாழன் இரவு வந்துள்ளது. மூங்கிலை உடைக்கும் போது மின்சார வயரில் துதிக்கை பட்டுள்ளது. இதில் யானை உயிரிழந்தது.
இது குறித்து சனிக்கிழமை வனத்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த யானையை பார்வையிட்டனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் குழு சம்பவ இடத்தில் யானையை பிரேத பரிசோதனை செய்தது.