முகப்பு
தமிழ்நாடு

விருதுநகரில் அணுசக்திக்கு எதிரான இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் அணு உலைகளை மூட வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 10 ஜூலை, 2015 at 6:21 PM
பகிர்:

தமிழகத்தில் அணு உலைகளை மூட வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் உதயகுமார் தலைமையில் ஆதரவாளர்கள் அணுதீமையற்ற தமிழகத்தை உருவாக்குவதற்காக தொடர்வண்டி பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாகர்கோவில்-மும்பை விரைவு ரயிலில் பயணம் செய்த நிலையில், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் குறிப்பிட்ட நேரம் நிற்கும் போது பொதுமக்களிடையே அணு உலைகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் செய்து வருகின்றனர்.

அதேபோல், விருதுநகர் ரயில்வே நிலையத்திற்கு வந்த ரயிலில் இறங்கிய  அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க தலைவர் ஆர்.உதயகுமார் தனது ஆதவாளர்கள் ஆகியோருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அதில், தமிழகத்தில் உள்ள கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நலையங்களை மூடவும் மற்றும் நீயூட்ரினோ திட்டத்தையும் அகற்றவும் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.