முகப்பு
தமிழ்நாடு

நெல்லை மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை

மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது.

நிகழ் தென்மேற்கு பருவ மழை ஜூன் மாத இறுதியில் தொடங்கியபோதிலும், தொடர்ந்து பெய்யவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக மழை இல்லை. கடும் வெப்பம் நிலவி வந்ததால் அணைகளின் நீர்வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது.

கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மழை இல்லாமல் அணைகளின் நீர்வரத்து குறைந்து வந்தது.

இதனிடையே வெள்ளிக்கிழமை மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 17 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 9 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 3.4 மி.மீ மழையும், ராமநதி அணையில் 3 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 5 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 8 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

நீர்வரத்து: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 756.25 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 116 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 82.71 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 22.84 கனஅடியும், குண்டாறு அணைக்கு விநாடிக்கு 14.87 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 5 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 10 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

அணைகளின் நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 81.15 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 90.42 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.23 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 57 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 62 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 69.40 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 32.47 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 86.50 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 29.50 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 52.50 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.34 அடியாகவும் இருந்தது.

பாசனம், குடிநீர் தேவைக்கு பாபநாசம் அணையிலிருந்து 904.75 கனஅடியும், மணிமுத்தாறு அணையிலிருந்து 575 கனஅடியும், கடனாநதி அணையிலிருந்து 110 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →