முகப்பு
தமிழ்நாடு

இத்தாலி நாட்டு பல்கலை.யுடன் கலசலிங்கம் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

இத்தாலி பெனவென்டா நகரில் உள்ள சானியோ பல்கலைக்கழகத்துடன், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:57 AM
பகிர்:

இத்தாலி பெனவென்டா நகரில் உள்ள சானியோ பல்கலைக்கழகத்துடன், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன், இத்தாலி சானியோ பல்கலைக்கழக தலைவர் பிலிப்போ-டி-ரோஸி மற்றும் பேராசிரியர் லுகிசி லீல்மோ ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுனர். அப்போது சென்னை ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயக்குநர் டாக்டர் எஸ்.அறிவழகி உடனிருந்தார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, இரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவார்கள். கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் இத்தாலி சென்று ஒரு பருவம் புதிய தொழில் நுட்ப பிரிவு படித்து வரலாம். இத்தாலி நிபுணர்கள் இங்கு வந்து சர்வதேச தொழில்நுட்ப மாநாடுகளில் கலந்து கொள்ளலாம்.

ஒப்பந்தப்படி, இத்தாலிய பேராசிரியர் லுகிசி லீல்மோ, கலசலிங்கம் பல்கலைக்கழகம் வருகைபுரிந்து சக்தி மேலாண்மை கட்டுப்படுத்துதலும், வளர்ச்சியடைதலும் என்ற தலைப்பில் பாடப்பிரிவு உருவாக்கி வகுப்பு நடத்தி சான்றிதழ் வழங்குகிறார்.

வேந்தர் க.ஸ்ரீதரன், ஞாயிற்றுக்கிழமை இது குறித்து கூறுகையில்: இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி தரம் மேலும் வலுப்பெரும். கலசலிங்கம் பல்கலைக்கழகம் மேலும் பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவுள்ளதாயும் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →