தமிழ்நாடு

தனுஷ்கோடி கடல் பகுதியில் தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி

ரவிசந்திரன்

ராமேசுவரத்திற்கு வரும்  சுற்றுலா பயணிகள் கடலில் நீராட சென்று கடல் அலையில் சிக்கி தவிக்கும் போது அவர்களை மீட்பது குறித்து ராமேசுவரம் தீயணைப்பு வீரர்களுக்கு உயர் அதிகாரிகள் தனுஷ்கோடி கடல் பகுதியில் வியாழக்கிழமை பயிற்சி அளித்தனர்.

ராமேசுவரம் திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இவர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடல், தனுஷ்கோடி கடல், முந்தராயர் சத்திரம் கடல், அர்ச்சல்முனை பகுதி கடல் ஆகிய கடல் பகுதிகளில் நீராடி செல்கின்றனர். பக்தர்களும், சுற்றுலாவாசிகளும் சில நேரங்களில் கடலின் அலையின் வேகம் மற்றும் தன்மை தெரியாமல் கடல் அலையில் சிக்கிக் கொள்கின்றனர். அப்படி சிக்குபவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து ராமேசுவரம் தீயணைப்பு வீரர்களுக்கு முகுந்தராயர் சத்திரம் கடல் பகுதியில் தீயணைப்பு அலுவல நிலைய அலுவலர் கேசவதாசன் தலைமையில் சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டன. இப்பயிற்ச்சியில் கடல் அலையில் சிக்குபவர்களை லைப்பாய், லைப்ஜாக்கட், ரோப் ஆகியவற்றை பயன் படுத்தி மீட்பது குறித்து தலைமை தீயணைப்பு வீரர் கந்தசாமி வீரர்களுக்கு  சிறப்பு பயிற்ச்சி அளித்தார்.பயிற்ச்சியில் ராமேசுவரம் பகுதியியை சேர்ந்த ஐந்து  தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி குறித்து தீயணைப்பு அலுவல நிலைய  அலுவலர் கேசவதாசன் கூறியது:

தீயணைப்பு விரர்களுக்கு குளம்,ஏரி,கால்வாய் ஆகிய பகுதிகளில் மட்டும் பயிற்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.அப்பகுதிகளில் ஏற்படும் விபத்துகளுக்கு மட்டும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் முதன் முதலாக கடலில் சிக்கி தவிக்கும் பக்தர்கள், சுற்றுலாவாசிகளை மீட்பது எப்படி குறித்து வீரர்களுக்கு சிறப்பு பயிற்ச்சி அளிக்கப்பட்டுள்ளது  என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT