வேலூரில் ஜூலை 26-ம் தேதி பா.ம.க. மாநாடு: தொண்டர்களுக்கு ராமதாஸ் அழைப்பு
பாமகவின் நான்காவது மண்டல மாநாடு வேலூரில் ஜூலை 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
பாமகவின் நான்காவது மண்டல மாநாடு வேலூரில் ஜூலை 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
பாமகவின் 4-ஆவது மண்டல மாநாடு வேலூரை அடுத்த பள்ளிகொண்டா நகரில் ஜூலை 26-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
கோவையில் மாநாடு நடந்து முடிந்த 14 நாள்களில் வேலூரில் மாநாடு நடைபெற உள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் இருவார இடைவெளியில் இரு பிரமாண்ட மாநாடுகள் வெற்றிகரமாக நடைபெற்றதாக வரலாறு இல்லை.
அந்தச் சாதனையை பாமகதான் முதன்முதலில் படைக்க உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு இந்த மாநாடு அடித்தளமாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.