முகப்பு
தமிழ்நாடு

விருதுநகரில்  ரயில்வே அலுவலர் மனைவியிடம் 5 சவரன் நகை பறிப்பு

விருதுநகர் ரயில் நிலையத்தை கடந்து சென்ற ரயில்வே அலுவலரின் மனைவியிடம் 5 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On : 26 ஜூலை, 2015 at 9:35 PM
பகிர்:

விருதுநகர் ரயில் நிலையத்தை கடந்து சென்ற ரயில்வே அலுவலரின் மனைவியிடம் 5 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

    விருதுநகர் எம்.எஸ்.பி நகரைச் சேர்ந்தவர் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ்(55). இவர் ரயில் நிலையத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி(50). இவர் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ரயிலில் இறங்கி கிழக்கு பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, சரக்கு ரயில்பெட்டிகள் நிறுத்தமிடத்தை கடக்கும் போது திடீரென மர்ம நபர் ஒருவர் ராஜேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினாராம்.

   இது தொடர்பாக விருதுநகர் ரயில் நிலைய போலீஸாரிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.