புதுவையில் இருந்து மும்பைக்கு உறவினர்களால் கடத்தப்பட்ட கைக்குழந்தை மீட்பு
புதுச்சேரி குழந்தைகள் நலக் குழு மேற்கொண்ட நடவடிக்கையால் புதுவையில் இருந்து உறவினர்களால் மும்பைக்கு கடத்தப்பட்ட கைக்குழந்தை மீட்கப்பட்டது.
புதுச்சேரி குழந்தைகள் நலக் குழு மேற்கொண்ட நடவடிக்கையால் புதுவையில் இருந்து உறவினர்களால் மும்பைக்கு கடத்தப்பட்ட கைக்குழந்தை மீட்கப்பட்டது.
புதுச்சேரி மூலக்குளம் அன்னை தெரசா நகரைச் சேர்ந்த மேத்யூஸ் தாழத்து பிரசாத், அவரது மனைவிடிரெஸ்ஸô ஜோசப். இவர்களது 2 வயது கைக்குழந்தை நோவா மேத்யூ. இந்நிலையில் கடந்த 24-ம் தேதி டிரெஸ்ஸô ஜோசப் புதுவை குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் அளித்தார்.
அதில் தனது 2 வயது குழந்தையை தனது மாமனார், தாழத்து மேத்யூ பிரசாத், மாமியார் அனிதா பிரசாத், மைத்துனர்கள் ஜேக்கப் பிரசாத், அபி பிரசாத் ஆகியோர் சேர்ந்து கடந்த 22-ம் தேதி தன்னை வீட்டில் அறையில் பூட்டி விட்டு, 2 ஆண்டுó கைக்குழந்தையை கடத்திச் சென்று விட்டனர்.
மேலும் தனக்கும், தனது கணவருக்கும் கேரள மாநிலத்தில் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உளளது. தனது குழந்தையை கடத்திச் சென்று விடுவோம் என ஏற்கெனவே மைத்துனர்கள் தன்னை மிரட்டியிருந்தனர் எனத் தெரிவித்திருந்தார்.
குழந்தைகள் நலக்குழுத் தலைவர் டாக்டர் வித்யாராம்குமார் புகாரை பரிசீலித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் இடையே ஆன தகராறில் குழந்தை பாதிக்கப்படக்கூடாது. குழந்தையின் நலம் என்பது பணம் மட்டும் அரவணைப்பால் மட்டும் கிடைத்து விடாது.
குழந்தையின் வயது, இனம், காப்பாளரின் தகுதியை ஆகியவற்றை கருதியும், தந்தைக்கு குழந்தை மீது போதிய ஈடுபாடு இல்லாத காரணத்தால், தாயிடமே குழந்தை நோவா மேத்யூ இருப்பது பாதுகாப்பு எனக்கருதியும், சிறிய வயதில் தாயின் வழிகாட்டுதல், அரவணைப்பு குழந்தைக்கு மிகவும் அவசியம்.
மேலும் ஹிந்து சிறுபான்மையினர் காப்பாளர் சட்டத்தின்படி 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தையின் பராமரிப்பு தாயிடம் தான் இருக்க வேண்டும் என குழந்தைகள் நலக்குழு உத்தரவிட்டது.
மேலும் கடத்தப்பட்ட குழந்தையை மீட்டுத் தருமாறு ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்துக்கு புகாரை பரிந்துரை செய்தது. போலீஸôரின் தீவிர தேடுதல் வேட்டையில் மும்பையில் குழந்தை நோவா மேத்யூ உறவினர்களிடம் இருப்பது தெரிந்தது.
அவர்களிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டு, தாய் டிரெஸ்ஸô ஜோசப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. ரெட்டியார்பாளையம் உதவி எஸ்.ஐ. துரைராஜ், காவலர் சிவக்குமார் ஆகியோர் மும்பைக்கு சென்று குழந்தையை மீட்டு வந்தனர். புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவால் விசாரிக்கப்படும் 2-வது குழந்தை கடத்தல் சம்பவமாகும். ஏற்கெனவே காவலர் ஒருவரே தனது 3 வயது குழந்தையை கடத்திய சம்பவத்தில் குழந்தைகள் நலக்குழு விசாரித்து நடவடிக்கை எடுத்தது.