அப்துல்கலாம் மறைவு: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் இரங்கல்
சர்வமத நல்லிணக்க நாயகர் டாக்டர் அப்துல்கலாம் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலாம் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
சர்வமத நல்லிணக்க நாயகர் டாக்டர் அப்துல்கலாம் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலாம் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் குடியரசுத்தலைவர், விண்வெளித்துறை விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல்கலாம் மறைவு தேசத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். விண்வெளித்துறையில் அரிய சாதனைகளை நிகழ்ச்சி நாட்டிற்கு பெருமையைத் தேடித்தந்தவர்.
குழந்தைகளை, மாணவர்களை நேசிக்கும் அன்பே உருவானவர். மழலை மலர்களிடம் கேள்விகள் கேட்டுப்பெறுவதில் அலாதி அன்பு உடையவர். ஒப்பற்ற கல்வியாளர். சிறந்த சிந்தனையாளர். உலகின் தலைசிறந்த விஞ்ஞானி. சிறந்த குடியரசுத்தலைவர். சர்வமத நல்லிணக்க நாயகர். மனிதநேய பண்பாளர் என பன்முகங்கள் கொண்ட டாக்டர் அப்துல் கலாமின் இன்னுயிர் அமைதிபெற எல்லாம் வல்ல இறை அருளைப் பிரார்த்திக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Advertisement