தமிழ்நாடு

நாகை அருகே அய்யனார் கோயிலில் வைக்கப்பட்ட பிரபாகரன் சிலை அகற்றம்

தினமணி

நாகப்பட்டினம் அருகே அய்யனார் கோயிலில் வைக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சிலை வெள்ளிக்கிழமை இரவு அகற்றப்பட்டது.

நாகப்பட்டினம், தெற்கு பொய்கைநல்லூர், கீழத் தெருவில் 80 குடும்பங்களுக்கு சொந்தமான சேஷராய அய்யனார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், கோயில் முன்புறம் யானை ஒன்றும், இரண்டு குதிரை சிலைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு குதிரையின் அருகே காவல் வீரன் சிலையும், மற்றொன்றின் அருகே விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் சிலையும் அமைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, கோயில் கும்பாபிஷேகம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை கோயில் முகப்பில் இருந்த பிரபாகரன் சிலை அகற்றப்பட்டிருந்தது. மேலும், சிலை இருந்த இடத்தில் சிமென்ட் பூசப்பட்டிருந்தது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, போலீஸார் வந்து சிலையை அகற்றியதாக கூறினர். ஆனால், போலீஸ் தரப்பில், கிராம மக்களே பிரபாகரன் சிலையை அகற்றியதாக தெரிவித்தனர். இதனால், சிலையை அகற்றியதில் உள்ள மர்மம் நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT