முகப்பு
தமிழ்நாடு

திறன்பேசி, செல்பேசி அட்டை உள்ளிட்ட தமிழில் புதிதாக 1000 வார்த்தைகள் சேர்ப்பு!

புதிய சொற்கள் தினசரிகள், தொலைக்காட்சி நிறுவனங்கள், வானொலி அலுவலகங்கள், வார இதழ்கள் போன்றவற்றுக்கு...

Updated On : 9 ஜூன், 2015 at 4:00 PM
பகிர்:

அறிவியல், வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உள்ள வார்த்தைகளுக்கு ஈடான 1000 தமிழ் வார்த்தைகளை தமிழ் வளர்ச்சித் துறை கடந்த சில வருடங்களில் உருவாக்கியுள்ளது.

11 பேர் கொண்ட சொல் வங்கிக் குழுவில் தமிழ் அறிஞர்கள், மூத்தப் பத்திரிகையாளர்கள், கவிஞர்கள், ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் ஆகியோர் உள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சந்தித்து புதிய தமிழ்ச் சொற்கள் தொடர்பான விவாதங்களை நடத்துவார்கள். தொழில்நுட்ப வார்த்தைகளுக்கு ஈடான சொற்களை உருவாக்குவதுதான் இவர்கள் பணி.  சொற்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அரசிடம் அவற்றுக்கு அனுமதி வாங்கப்படும். பிறகு அரசு நிர்வாக அகராதியில் இணைக்கப்படும். அகராதியின் பிரதிகள் அரசுத் துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர் இந்தச் சொற்கள் அரசு அறிக்கையில், கோப்புகளில் இடம்பெற வாய்ப்புகள் உருவாகும். இந்தப் புதிய சொற்கள் தினசரிகள், தொலைக்காட்சி நிறுவனங்கள், வானொலி அலுவலகங்கள், வார இதழ்கள் போன்றவற்றுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆட்சிச் சொல் அகராதியை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. இது அரசு அலுவலகங்களில் கடிதங்களைப் பிழையில்லாமல் தமிழில் எழுதப் பெரிதும் பயன்படும். தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் எம். ராஜாராம், 650 பக்கங்கள் கொண்ட எட்டாவது ஆட்சிச் சொல் அகராதியைத் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். ஆட்சி மொழிச் சட்டம் உருவான 1957-ம் ஆண்டு முதல் அகராதி வெளியிடப்பட்டது.

Advertisement

சமீபத்திய புதிய தமிழ் வார்த்தைகள்:

Smartphone - திறன்பேசி

Inbox - உள் பேழை

PIN - தன் அடையாள எண்

SMS - சிற்றஞ்சல்

SIM card - செல்பேசி அட்டை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.