தமிழ்நாடு

திருச்சுழி அருகே இளம்பெண் மாயம்: தாய் புகார்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரின் மகள் பவித்ரா(20). இவர் மருந்தாளுநர் பட்டயப் படிப்பு முடித்துள்ளார். இந்நிலையில், செவ்வாய்கிழமை அருப்புக்கோட்டையில்

எஸ். பாண்டியன்

திருச்சுழி அருகே இளம்பெண் மாயமானதாக தாயார் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் செய்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரின் மகள் பவித்ரா(20). இவர் மருந்தாளுநர் பட்டயப் படிப்பு முடித்துள்ளார். இந்நிலையில், செவ்வாய்கிழமை அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மருந்துக் கடையில் வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்றாராம். ஆனால், இரவு நீண்ட நேரமான பின்னரும் வீடு திரும்பாதது குறித்து லட்சுமி அதிர்ச்சி அடைந்தாராம். இது தொடர்பாக உறவினர்கள் மற்றும் தோழிகளிடமும் விசாரித்து உள்ளார். அதில் எங்கிருக்கிறார் என்கிற தகவல் தெரியவில்லையாம்.

இதைத் தொடர்ந்து திருச்சுழி காவல் நிலையத்தில் லட்சுமி புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜுலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

SCROLL FOR NEXT