தமிழ்நாடு

விருதுநகரில் மூதாட்டியிடம் நகை பறித்த இருவர் கைது

விருதுநகரில் சாமி கும்பிட வந்த இடத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த இருவரை பஜார் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகரில் சாமி கும்பிட வந்த இடத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த இருவரை பஜார் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

விருதுநகர் பர்மா காலனியைச் சேர்ந்த மாரியம்மாள்(70). இவர் கடந்த ஏப்.2ம் தேதி வெயிலுகந்தம்மன் திருக்கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக வந்துள்ளார். அப்போது, ஆண் மற்றும் பெண் ஆகியோர் ரூ.5 ஆயிரத்தை கீழே தவறவிட்டுள்ளனர். அதையடுத்து மாரியம்மாள் பணத்தை எடுத்து அவர்களிடம் ஒப்படைப்பதற்காக குணிந்தாராம். அப்போது, அவர்கள் மாரியம்மாள் எதிர்பாரத நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினார்கள்.

இது குறித்து மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பஜார் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த விஸ்வநாதன்(48) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டிச்செல்வி(38) ஆகியோர் நகை பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்தது. உடனே இவர்கள் இருவரையும் பஜார் காவல் நிலைய போலீஸார் கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT