தேசிய அளவில் நடைபெற்ற 10-ம் வகுப்புத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா
தேசிய அளவில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா பன்னாட்டு உறைவிடப் பள்ளி மாணவ மாணவியருக்குப்
தமிழ்நாடுதேசிய அளவில் நடைபெற்ற 10-ம் வகுப்புத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா
தேசிய அளவில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா பன்னாட்டு உறைவிடப் பள்ளி மாணவ மாணவியருக்குப்
தேசிய அளவில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா பன்னாட்டு உறைவிடப் பள்ளி மாணவ மாணவியருக்குப் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தாளாளர் சி.குமரேசன் தலைமை தாங்கினார். நிர்வாக அறங்காவலர் டாக்டர் சித்ரா குமரேசன், முதல்வர் முருகதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப் பள்ளியின் மாணவர்கள் எஸ்.பிரகாஷ், கே.துர்கேஷ்பரத், எல்.கௌசல்யா, டி.பூரணஸ்ரீ ஆகியோர் 10-க்கு 10 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கே.அக்ஷயா, பி.மனோ பிரேம்நாத் ஆகியோர் 10 க்கு 9.8 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் எஸ்.பிரகாஷ், கே.துர்கேஷ்பரத், கே.அக்ஷயா, எல்.கௌசல்யா, பி.மனோ பிரேம்நாத், டி.பூர்ணஸ்ரீ, ஆர்.வைரமுத்து ஆகிய 7 பேர் 10-க்கு 10 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழில் எஸ்.பிரகாஷ், கே.துர்கேஷ் பரத், எல்.கௌசல்யா, டி.பூரணஸ்ரீ, கே.அக்ஷயா, பி.மனோபிரேம்நாத், ஏ.விமலாதித்தன் ஆகிய 7 பேர் 10-க்கு 10 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதத்தில் எஸ்.பிரகாஷ், கே.துர்கேஷ் பரத், எல்.கௌசல்யா, டி.பூரணஸ்ரீ, பி.மனோ பிரேம்நாத் ஆகிய 5 பேர் 10-க்கு 10 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அறிவியலில் எஸ்.பிரகாஷ், கே.துர்கேஷ்பரத், எல்.கௌசல்யா, டி.பூரணஸ்ரீ, கே.அக்ஷயா, ஆர்.வைரமுத்து, பி.மனோ பிரேம்நாத் ஆகிய 7 பேர் 10-க்கு 10 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சமூக அறிவியலில் எஸ்.பிரகாஷ், கே.துர்கேஷ் பரத், எல்.கௌசல்யா, டி.பூரணஸ்ரீ, கே.அக்ஷயா, பி.மனோ பிரம்நாத் ஆகிய 6 பேரும் 10-க்கு 10 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களையும், இவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் தாளாளர் சி.குமரேசன் பாராட்டி பரிசுகள் வழங்கினார். ராஜபாளையம் தொழிலதிபர் டைகர் சம்சுதின் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அமுதா தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.