முகப்பு
தமிழ்நாடு

அரசின் மலிவு விலை துவரம் பருப்பு புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்குக் கிடைக்குமா?

தமிழகம் முழுதும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய மலிவு விலை துவரம் பருப்பு விற்பனை செய்யும் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கிடைக்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On : 2 நவம்பர், 2015 at 7:19 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:56 PM

தமிழகம் முழுதும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய மலிவு விலை துவரம் பருப்பு விற்பனை செய்யும் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கிடைக்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தீபாவளிப் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஆன்லைன் வர்த்தகம், பெரு நிறுவனங்களின் பதுக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூ.120-க்கு விற்கப்பட்டு வந்த  துவரம்பருப்பு  இரு மடங்காக  அதிகரித்து கிலோ ரூ.210 முதல் ரூ.230 வரை உயர்ந்தது. இதைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மாநில அரசுகளை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்ததனர்.

இதைத்தொடர்ந்து மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து 5 ஆயிரம் டன் துவரம் பருப்பை அண்மையில் இறக்குமதி செய்தது. அதில், தமிழகத்துக்கு 500 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரப்பெற்ற துவரம் பருப்பை அரவை ஆலைகள் மூலம் உடைத்து சுத்தம் செய்து பாக்கெட்டுகளில் அடைத்து, 500 கிராம் ரூ.55-க்கும் 1 கிலோ ரூ.110 என்ற விலையில் கூட்டுறவு பண்டக சாலை, பல்பொருள் விற்பனை அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் என முதல்வர் அறிவி்த்தார்.

Advertisement

இதைத்தொடர்ந்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் மலிவு விலை துவரம் பருப்பு விற்பனை தொடங்கியது, முதல் நாளில் மட்டும் 15 டன் பருப்பை பொதுமக்கள் வாங்கிச்சென்றுள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை உள்ளிட்ட பின்தங்கிய மாவட்டங்களுக்கு மலிவு விலை துவரம் பருப்பு எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இது குறித்து நகர கூட்டுறவு பண்டகசாலை அலுவலர்களிடம் விசாரித்தபோது, புதுக்கோட்டை மாவட்டத்துக்கான துவரம் பருப்பு ஒதுக்கீடு இதுவரை செய்யப்பட்டவில்லை. அது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் தீபாவளிக்குள் கிடைக்குமா என்பது குறித்து உறுதியாகக்கூறமுடியாதெனவும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.