முகப்பு
தமிழ்நாடு

நாய்க்குட்டிக்கு தவறான எக்ஸ்ரே: தனியார் நிறுவனத்திற்கு ரூ.2 ஆயிரம் அபராதம்

நாய்க்குட்டிக்கு தவறான எக்ஸ்ரே எடுத்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.2 ஆயிரம் அபராதமாக விதித்து கடலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:29 AM
பகிர்:

நாய்க்குட்டிக்கு தவறான எக்ஸ்ரே எடுத்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.2 ஆயிரம் அபராதமாக விதித்து கடலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாலைகட்டித் தெருவைச் சேர்ந்தவர் சி.ச.சிபிசக்கரவர்த்தி. இவரது வளர்ப்பு நாய்க்குட்டி நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி அரசு கால்நடை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது நாய்க்குட்டிக்கு சிகிச்சையளிக்க எக்ஸ்ரே எடுக்கக்கூறி மருத்துவர் பரிந்துரை சீட்டு அளித்துள்ளார். அதன்படி சிபிசக்கரவர்த்தி சிதம்பரத்திலுள்ள தனியார் ரத்த பரிசோதனை நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு நாய்க்கு எக்ஸ்ரே எடுத்து மீண்டும் மருத்துவரை சந்தித்தார்.

ஆனால், தான் குறித்து கொடுக்கப்பட்ட பாகம் எக்ஸ்ரே எடுக்கப்படவில்லையெனவும், தெளிவாக இல்லையெனவும் கூறி மீண்டும் சரியான எக்ஸ்ரே எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், இதற்கு காலதாமதம் ஆனதால் நாய்க்கு சிகிச்சை அளிக்க முடியாமல் 3-ம் தேதி இரவே நாய் இறந்தது.

சரியான எக்ஸ்ரே எடுக்கப்படாததால் தொடர் சிகிச்சை அளிக்கை அளிக்க முடியாமல் தனது நாய் இறந்ததாகக் கூறி இது சேவை குறைபாடு என்று கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் சிபிசக்கரவர்த்தி வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர் என்.கலியமூர்த்தி, உறுப்பினர் பி.எழிலரசி முன்னிலையில் நடைபெற்றது. இதன் வழக்கில் அண்மையில் உத்தரவிடப்பட்டது. அதில், தனியார் நிறுவனம் எக்ஸ்ரே கட்டணம் ரூ.250ஐ திருப்பி அளிக்க வேண்டும். மேலும், அவர்களின் சேவை குறைபாட்டினால் ஏற்பட்ட வீண் அலைச்சல், மன உளைச்சல், இழப்பு ஆகியவற்றிற்கு இழப்பீடாக ரூ.2ஆயிரம் வழங்க வேண்டுமென கூறப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →