தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான அறிவியல் சோதனைகள் குறித்த பயிற்சி
ஸ்ரீவில்லிபுத்தூர்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க நிலையில் பயிலும் குழந்தைகளுக்கு, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும்,
தமிழ்நாடுதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான அறிவியல் சோதனைகள் குறித்த பயிற்சி
ஸ்ரீவில்லிபுத்தூர்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க நிலையில் பயிலும் குழந்தைகளுக்கு, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும்,
ஸ்ரீவில்லிபுத்தூர்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க நிலையில் பயிலும் குழந்தைகளுக்கு, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், அறிவியல் கருத்துக்களைச் செயல்பாடுகள் மூலம் கற்கவும், ஆசிரியர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில், எளிய அறிவியல் சோதனைகள் மற்றும் செயல் திட்டங்கள் என்ற பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட 11 குறுவளமையங்களில் நடைபெற்ற இப் பயிற்சியில் 391 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.சிவந்திபட்டி குறுவமையத்தில் ஆசிரியப் பயிற்றுநர் சுந்தரேஸ்வரி தலைமையில் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி தொடங்கி வைத்துப் பேசுகையில் கூறியதாவது:
இந்தப் பயிற்சி அறிவியல் கற்பித்தலின்போது, ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை களையக் கூடிய வகையில் ஒவ்வொரு செயல்பாடும் விளக்கமாக அளிக்கப்படுகிறது. அறிவியல் சோதனைகளைச் செய்யும்போது, அச்சோதனைகளிலிருந்து மாணவர்கள் பெறும் அறிவியல் அறிவினை வலியுறுத்த வேண்டும்.
மாணவர்களின் அறிவியல் கற்கும் திறனை அதிகரித்து, அறிவியல் ஆர்வத்ததைத் தூண்டுவதுடன் வினாக்கள் கேட்டு உண்மைகளைக் கண்டறியும் திறனை வளர்க்க இயலுவதுடன், மாணவர்களின் ஆராயும் திறனை மேம்படுத்த இயலும்.அறிவியல் பூர்வமாகச் சிந்தித்தல், நடைமுறையில் நிகழும் நிகழ்வுகளை அறிவியல் உண்மைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தல். காரண காரியத்தைத் தொடர்பினைக் கண்டறிதல், எந்த ஒரு கருத்தையும் கேட்டு, அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதனை ஆழ்ந்து பகுப்பாய்வு செய்து, சரியான முடிவுக்கு வருதல், வினாக்களை எழுப்பிச் சரியான விளக்கங்களைப் பெறுதல் ஆகிய திறன்களை மாணவர்களிடம் ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும் என்றார்
அவர்.பயிற்சியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான்சேவியர்ராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.