முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சமுதாயத்தினரிடையே மோதல்: 2 பேர் கைது

தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சமுதாயத்தினரிடையே மோதல்: 2 பேர் கைது

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:31 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மற்றும் பிளஸ் 2 மாணவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லியைச் சேர்ந்த சிலர் மல்லி-பாட்டக்குளம் சாலையில் செவ்வாய்கிழமை இரவு பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே மேட்டு முள்ளிகுளத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த கருப்பசாமி, ராமநாதன் ஆகிய இருவர் சைக்கிளில் வந்துள்ளார்கள்.

அப்போது பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தவர்கள், சைக்கிளிலில் சென்வர்களை நில்லுங்கள் என்று கூறி, அவர்களை நிறுத்தி தகராறில் ஈடுபட்டார்களாம். இதில் ஏற்பட்ட மோதலில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தவர்கள் சைக்கிளில் வந்த இருவரையும் சாதியைக் கூறி இழிவாகப் பேசி தாக்கியுள்ளார்கள். இதில் காயமுற்ற இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ராமநாதன், மல்லி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பொறியியல் மெக்கானிக்கல் முடித்துள்ள கார்த்திக், பிளஸ் 2 மாணவர் பிரசன்னகுமார் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

மேலும் சந்துரு, முத்துக்குமார், பிரியதர்ஷன், ராம்குமார், செல்வம் ஆகிய 5 பேரைத் தேடி வருகிறார்கள். இப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →