முகப்பு
தமிழ்நாடு

பிளவக்கல் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் வியாழக்கிழமை திறந்துவிடப்பட்டது.

தமிழ்நாடு

பிளவக்கல் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் வியாழக்கிழமை திறந்துவிடப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:31 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் வியாழக்கிழமை திறந்துவிடப்பட்டது.

சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் வி.செந்தில்குமாரி முத்துராஜ், ஒன்றியக் குழுத் தலைவர்கள் கி.காளிமுத்து, சு.கனகுஅம்மாள், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் தி.ராமசாமி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன் அணைகளிலிருந்து தண்ணீரை பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்துவிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழக அரசின் உத்தரவுப்படி பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பெரியாறு அணையின் முழு நீர்மட்டம் 204.40 மீ. அதன் முழு கொள்ளளவு 192 மில்லியன் கனஅடியாகும். கோவிலார் அணையின் முழு நீர்மட்டம் 212 மீ. அதன் முழு கொள்ளவு 133 மில்லியன் கனஅடியாகும். இன்றைய கொள்ளவாக பிளவக்கல் பெரியார் அணையில் 174.15 கனஅடி நீரும், கோவிலாறு அணையில் 46.75 கன அடி நீரும் உள்ளது. (பெரியாறு அணையில் 203.90 மீட்டரும், கோவிலாறு அணையில் 207.60 மீட்டரும் நீர் இருப்பில் உள்ளது).

பெரியாறு அணைக்கு வினாடிக்கு 44.40 கன அடி நீரும், கோவிலாறு அணைக்கு 0.08 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து, இரு அணைகள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ நீர் இருப்பைப் பொருத்து வினாடிக்கு 150 கன அடி வீதம் கண்மாய் பாசனத்திற்கும், பெரியாறு அணையிலிருந்து 3 கன அடி வீதம் கால்வாய் பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் பயனாக வத்திராயிருப்பு பகுதிகளில் உள்ள கான்சாபுரம், கொடிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பூரிப்பாறைக்குளம், சீவனேரி கண்மாய், குணவந்தனேரி கண்மாய், கொடிக்குளம், பெத்தான்குளம், புங்கன்குளம், வத்திராயிருப்பு பெரியகுளம், விராகசமுத்திரம் கண்மாய் ஆகிய 8 கண்மாய்கள் மூலம் 1167.85 ஹெக்டேர் நிலங்களும், மற்றும் நேரடி கால்வாய் பாசனம் மூலம் 174.69 ஹெக்டேர் நிலங்களும் ஆக மொத்தம் 1342.54 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். நீர் இருப்பைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் அதிக மசூல் பெறும் நோக்கில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அப்போது கேட்டுக் கொண்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →