முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் விமானம்: ரூ.25 கோடியில் தங்கத் தகடு பதிக்கும் பணி தொடக்கம்

கோ.ஜெயக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம்

தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் விமானம்: ரூ.25 கோடியில் தங்கத் தகடு பதிக்கும் பணி தொடக்கம்

கோ.ஜெயக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம்

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:34 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம் 2016 ஜனவரி 20-ம் தேதி நடைபெறுவதையொட்டி, கோவில் விமானத்தில் உள்ள சிற்பங்களுக்கு புதன்கிழமை தங்கத் தகடும் பணி தொடங்கியது.

ஆண்டாள் கோவிலுக்கு 10.2.2000 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது ராம்கோ தொழில் குழுமத் தலைவரும் ஸ்ரீஆண்டாள் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவருமான பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா மற்றும் தக்கார் கி.ரவிச்சந்திரன் ஆகியோரின் முயற்சியால் திருப்பணிகள் நடைபெற்று 2016 ஜனவரி 20-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கோவிலுடன் இணைந்த வடபத்ர சயனர் திருக்கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று 22.5.2015-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில் கோவில் விமானத்தில் உபயதாரர் மூலம் 70 கிலோ தங்கம் (ரூ.25 கோடி மதிப்பில்) பெறப்பட்டு, சிற்பங்களுக்கு தங்கத் தகடு பொறுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி சிற்பங்களுக்கான தங்கத் தகடு செய்யும் பணி இரவு பகலாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.புதன்கிழமை விமானத்தில் உள்ள சிற்பங்களுக்கு தங்கத்தகடு பொறுத்தும் பணியை தக்கார் கி.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மனவாள மாமுனிகள் சன்னதி ஜியர், மதுரை கூடழகர்கோவில் உதவி ஆணையர் மற்றும் நகை சரிபார்க்கும் அலுவலர் அனிதா, உதவி ஆணையர் ஹரிஹரன், கோவில் திருப்பணிகள் பொறுப்பு அலுவலர் காளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தங்கத் தகடு பொறுத்தும் பணி மற்றும் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் 2016 ஜனவரி 20-ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா, தக்கார் கி.ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →