வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 82 பெட்டி பட்டாசுகள் பறிமுதல்: ஒருவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 82 பெரிய பெட்டிகளில் இருந்த பட்டாசுகளை போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடுவீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 82 பெட்டி பட்டாசுகள் பறிமுதல்: ஒருவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 82 பெரிய பெட்டிகளில் இருந்த பட்டாசுகளை போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 82 பெரிய பெட்டிகளில் இருந்த பட்டாசுகளை போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், நக்கமங்கலத்தில் குறிப்பிட்ட ஒரு வீட்டில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிவகாசி தனி வட்டாட்சியருக்கு தகவல் வந்தது. இதன் பேரில் அவர் தலைமையில் மல்லி போலீஸ் சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் போலீஸார் பழவேசம் மகன் முருகன் (27) என்பவர் வீட்டை அதிரடியாக சோதனையிட்டனர். அங்கு 33 குரோஸ் சாட்டை வெடி, சோர்ஷா வெடி 46 பெரிய பெட்டிகள், சட்டி வெடி 3 பெரிய பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனை போலீஸார் பறிமுதல் செய்தனர். மல்லி போலீஸ் சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தார்.